நிதி மோசடி தொடர்பில் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் கண்டியை சேர்ந்த பெண் ஒருவரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குற்றவியல் வழக்கின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தவறு இருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
முறைப்பாட்டாளரான பெண் வழங்கிய வாக்குமூலம் ஊடாக இதுவொரு குற்றவியல் வழக்கு இல்லையெனவும் குடியியல் வழக்கு என தெரியவருவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதற்கமைய, ரஞ்சன் ராமநாயக்கவை இந்த வழக்கிலிருந்து விடுவித்து கண்டி நீதவான் சாமர விக்ரமநாயக்க நேற்று(12) உத்தரவிட்டார்.