ஜேர்மனியில் நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் முதலிடத்தை பெற்றுள்ளார்.
அவர் 10.16 வினாடிகளில் போட்டித் தூரத்தை ஓடி முடித்தார்.
யுபுன் ஆரம்பச் சுற்றில் 10.15 வினாடிகளில் ஓடி முதலிடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த நிலையில், அது யுபுன் அபேகோனின் தனிப்பட்ட சிறந்த பெறுதி என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.