இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியலில் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் இடம்பிடித்துள்ளார்.
Sunday Times சஞ்சிகை வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலுக்கமைய பிரதமர் ரிஷி சுனக் முன்னணி பணக்கார்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிரித்தானிய வரலாற்றில் 35 வருடங்களின் பின்னர் அரசியல்வாதியொருவர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.
ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு 651 மில்லியன் பவுண்களாகும். மூன்றாவது சார்ள்ஸ் மன்னரின் சொத்து மதிப்பு 610 மில்லியன் பவுண்களாகும்.