நாட்டை அண்மித்த தாழ் வளிமண்டலத்தில் ஏற்ப்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், தென் மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றுவீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.