இஸ்ரேலிற்கு ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை அனுப்ப எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை அமெரிக்க காங்கிரசிற்கு தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையிடம் இவ்வாறான திட்டம் காணப்படுவதை உறுதிசெய்துள்ள அதிகாரியொருவர்; இதற்கு அமெரிக்க காங்கிரசின் அனுமதி அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேலிற்கு ஒரு தொகுதி ஆயுதங்களை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ரபா மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டால் ஆயுத விநியோகத்தை இடைநிறுத்துவோம் என பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
