யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்துள்ளனர்.
பொலிசாரின் உத்தரவை மீறி தொடர்ந்தும் பயணித்த குறித்த நபரை பிடிப்பதற்கு பொலிசார் முயற்சித்த போது அவர் அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளார். இதன்போதே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
