களுத்துறை , நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த களுத்துறை சிறைச்சாலை கைதியொருவர் வைத்தியசாலையின் வாட் பிரிவின் கழிவறை ஜன்னல் ஊடாக தப்பிச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
வாத்துவ தெல்துவ பிரதேசத்தைச் சேர்ந்த ஹெரோயின் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்த கைதியொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைதி சிறைச்சாலையில் மற்றுமொரு கைதியின் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த 6ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைக்காவலர்களின் கண்காணிப்பில் வைத்தியசாலையின் 5ம் வாட் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் கழிவறைக்குச் செல்வதாக தெரிவித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அவரை கைதுசெய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.