T20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்கை சந்தித்தனர்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. அடுத்த மாதம் முதலாம் திகதி உலக கிண்ண தொடர் ஆரம்பமாகவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இலங்கை கிரிக்கட் அணி வீரர்களின் திறமைகள் அமெரிக்காவிலுள்ள கிரிக்கட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லையென தூதுவர் ஜூலி ச்சங்க் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
வீரர்களை சந்தித்த அவர், அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.