எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள டுவன்டி டுவன்டி உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான நியுசிலாந்து அணி விபரம் வெளியாகியுள்ளது.
கேன் வில்லியம்சம் அணியை வழிடத்தவுள்ளதாக நியுசிலாந்து கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கமைய ஆறாவது முறையாக டுவன்டி டுவன்டி உலக கிண்ணத்தில் வில்லியம்சன் விளையாடவுள்ளதுடன் நான்காவது முறையாகவும் அணித் தலைமைத்துவத்திற்கு தெரிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.
சிறந்த அனுபவங்களைக் கொண்டுள்ள டிம் சௌத்தி, ட்ரென்ட் போல்ட், உள்ளிட்டோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக பின் எலன், மைக்கல் பிராஸ்வெல், மார்க் ச்சேப்மன், டெவோன் கொன்வே, லொகி பெர்கசன், மெட் ஹென்றி, டெரில் மிச்சேல், ஜிம்மி நீசன், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்த்ர, மிச்செல் சேன்ட்னர், இஸ் ஷொதி, பென் சியர்ஸ் ஆகியோர் அணியில் உள்ளனர்.
மொத்தமாக 15 பேர் உலக கிண்ண தொடருக்கென தெரிவாகியுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உலக கிண்ண தொடருக்கான போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.