பல கோரிக்கைகளை முன்வைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
கண்டியில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி அனுராத செனவிரத்ன, நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நாளை (29) சுகயீன விடுமுறையில் செல்லவுள்ளதாகத் தெரிவித்தார்.