யாழ்ப்பாணம், அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் நேற்று மாலை (25) மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா எனும் 73 நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் பீடி புகைப்பதற்கு முயன்றவேளை படுக்கையில் தீப்பற்றி, தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாமென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
