மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மொனராகலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது எட்டு கிலோகிராம் உலர் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கஞ்சா கையிருப்பு விற்பனைக்கு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேக நபர்கள் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.