தியத்தலாவ Foxhill மோட்டார் கார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைதான மோட்டார் வாகனங்களின் சாரதிகள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் கைதுசெய்யப்பட்ட அவர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 30ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நேற்று இடம்பெற்ற இந்த கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் காரொன்று பந்தய ஓடுபாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது.
விபத்துக்குள்ளான மோட்டார் வாகனத்துடன் மற்றுமொரு வாகனம் மோதியுள்ளதுடன் விபத்தினையடுத்து குறித்த போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்கள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.