இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் செவ்வாய்கிழமை எடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பிலும் அமைச்சர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நுகர்வோரின் நலன்கருதி வர்த்தகர்கள் நியாயமான முறையில் விலை நிர்ணயத்தை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.