இந்திய மக்களவை தேர்தல் வாக்கெடுப்பு இன்று ஆரம்பமானது. 7 கட்டங்களாக இடம்பெறவுள்ள தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இன்று ஆரம்பமான வாக்கெடுப்பில் மக்கள் தமது ஜனநாயக உரிமையை வெளிப்படுத்துவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாடு, மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களின் பல தொகுதிகளில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
7 கட்டங்களாக தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதால், ஒவ்வொரு தொகுதிக்குமென குறிப்பிட்ட தினங்கள் வாக்களிப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜூன் மாதம் 4ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகுமென இந்திய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது வேலையில்லா நெருக்கடி, பொருட்களின் விலை அதிகரிப்பு, எதிர்க்கட்சியினர் மீதான அடக்குமுறை, மதத்தில் காணப்படும் அரசியல் தலையீடு என்பது முக்கிய விடயங்களாக மாறியுள்ளன. இந்த விடயங்கள் தேர்தல் வெற்றியில் தாக்கம் செலுத்துமென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.