பெட்மிட்டன் வீரர் விரேன் நெட்டசிங்க 2024 ஆம் ஆண்டு பரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
24 ஆயிரத்து 30 புள்ளிகளை பெற்று ஒலிம்பிக் போட்டியின் பெட்மிட்டன் போட்டி பிரிவுக்கு தகுதி பெற்ற வீரர்களில் 32 வது இடத்தை விரேன் நெட்டசிங்க பிடித்துள்ளார்.
20 வயதுடை வீரேன் நெட்டசிங்க, ஒலிம்பிக் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் இலங்கை பெட்டமிட்டன் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைக்க உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2012 இல், நிலுகா கருணாரத்ன செயல்திறன் மட்டத்தில் தேர்ச்சி பெற்று நேரடியாக ஒலிம்பிக் ஆணையை பெற்றிருந்தமையை குறிப்பிடத்தக்கது.
