தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புத்தாண்டு பாடல் திரிபுபடுத்தப்பட்டமை தொடர்பில் கலாசார அலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் உத்தரவுக்கமைய குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ரோஹன பெத்தகே பாடிய புத்தாண்டு பாடலே இவ்வாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் புத்தாண்டு பாடலை திரிபுபடுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.