ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (08) காலை கட்சியின் முன்னாள் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சிரேஷ்டர்கள் தலைமையில் அரசியல் குழுவின் அவசர கூட்டம் இடம்பெற்றதுடன், அங்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் அரசியல் குழு கூட்டத்தை அழைப்பதற்கோ, தீர்மானம் எடுப்பதற்கோ, கோரிக்கை விடுப்பதற்கோ உரிமையோ, அதிகாரமோ கிடையாது என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவினால் அரசியல் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.