அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் 4.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நகரின் பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தினால் நிவ்யோர்க்கிலுள்ள முக்கிய சின்னங்களில் ஒன்றான லிபர்ட்டி சிலையும் அதிர்ந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நிவ்யோர்க் நகரிலிருந்து 64 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நகரங்களிவும் நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கத்தையடுத்து நகரின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நகர மேயர் கெத்தி ஹொசுல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிலநடுக்கத்தினால் பொதுமக்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.