எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் போட்டிகளின் போது கலாசாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்ப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு நிகழ்வுகளை பிரதேசங்களில் நடத்துவது தொடர்பிலான ஆலோசனைகள் மாவட்ட செயலாளர்கள் ஊடாக அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலாசாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான விளையாட்டுக்களை புத்தாண்டு நிகழ்வுகளிலிருந்து விலக்குதல் மற்றும் புதிய விடயங்களை இணைத்தல் என்பது தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.