இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று Chattogram இல் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாடடத்தை தெரிவு செய்தது.
இதற்கமைய தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர நிறைவின் போது 4 விக்கட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றிருந்தது.
குசல் மென்டிஸ் 93 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 86 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். தினேஷ் சந்திமால் 34 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் தனஞ்ஜய டி சில்வா 15 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர். பந்துவீச்சில் ஹசான் மஹமூட் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.