இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இறுதி டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. இலங்கை நேரப்படி காலை 9.30க்கு பங்களாதேஷ் ச்செட்டக்ரேமில் போட்டி ஆரம்பமாகும்.
முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட அபார வெற்றியுடன் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தரப்படுத்தலில் 6 இடத்திற்கு முன்னேறியது.
இந்நிலையில் நாளைய டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெறுமாயின் டெஸ்ட் தரப்படுத்தில் 4ம் இடத்திற்கு முன்னேறுமென்பது குறிப்பிடத்தக்கது.