2024ம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ணத் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ளது. இதற்கான தீர்மானத்தை ஆசிய கிரிக்கட் பேரவை எடுத்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 19ம் திகதி முதல் 28ம் திகதி வரை கிரிக்கட் தொடர் இடம்பெறவுள்ளது.
தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. தொடரில் 8 அணிகள் விளையாடவுள்ளன.
இலங்கை, இந்திய. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மலேசியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய மகளிர் கிரிக்கட் அணிகள் இம்முறை ஆசிய கிண்ணத்தில் விளையாடவுள்ளன.