ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற 5வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
அஹமதாபாத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது. சாய் சுதர்சன் 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
169 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. டிவோல்ட் ப்ரேவிஸ் 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக சாய் சுதர்சன் தெரிவானார்.