சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் முன்னாள் தலைவரான ஆனந்த சமரகோன் இயற்கை எய்தியுள்ளார்.
1939ம் ஆண்டு பிறந்த அவர் முன்னாள் விமானப்படை அதிகாரியாவார். 1964ம் ஆண்டு அவர் முதற்தடவையாக விமானப் படையில் சேவையில் இணைந்தார். 1989ம் ஆண்டு அப்போதைய சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைவராக செயற்ப்பட்ட தேவீஸ் குருகே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததன் பின்னர் ஆனந்த சமரகோன் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
குறித்த காலப்பகுதியில் நாட்டில் காணப்பட்ட வன்முறையான சூழலுக்கு மத்தியில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அவர் 1994ம் ஆண்டு வரை குறித்த பதவியில் நீடித்தார். சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் முன்னேற்றத்திற்கான ஆனந்த சமரகோன் அவர்களின் தலைமையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் உட்பட இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலும் அவர் அதிகாரியாக செயற்ப்பட்டுள்ளார்.
இதேவேளை மறைந்த ஆனந்த சமரகோன் அவர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.