கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஏற்பாடு செய்த ‘இப்தார்’ நிகழ்வு புத்தசாசன, மத, கலாசார விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் நேற்று இடம்பெற்றது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய காஷா சிறுவர் நிதியத்திற்கு உதவிகளை வழங்கும் வகையில் பள்ளிவாசலின் தலைவர் தாஹீர் ரஷீரினால் அமைச்சரிடம் நன்கொடையொன்று வழங்கப்பட்டது.
அத்துடன் இம்முறை அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பங்கேற்பில் நடத்தப்படும் இப்தார் நிகழ்வுகளுக்கான நிதியை இந்த நிதியத்திற்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், எமக்கு எமது வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமாயின் அதுவே உண்மையான வெற்றியென குறிப்பிட்டார்.