இலங்கை கிரிக்கட் அணி வீரர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் ஓய்விலிருந்து நீங்கும் வகையில் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் வனிந்து ஹசரங்க விளையாடவுள்ளதாக கிரிக்இன்போ செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 22ம் திகதி சில்ஹெட்டில் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் லஹிரு குமார மற்றும் நிஷான் பீரிஸ் ஆகியோரும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஏதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ம் திகதியுடன் டெஸ்ட் தொடர் நிறைவடையவுள்ள நிலையில் அதனையடுத்து வனிந்து ஹசரங்க ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். இதேவேளை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வனிந்து ஹசரங்க தனது டெஸ்ட் ஓய்வு குறித்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.