தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேக்கியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்றைய தினம் (19) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. ஜப்பான் தூதரகத்தின் முக்கிய அதிகாரிகளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதான உறுப்பினர்கள் சிலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.