நாளை முன்னெடுக்கவிருந்த சுகாதார தொழிற்ச்சங்க நடவடிக்கையினை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்ச்சங்க கூட்டணியின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சு விடுத்து எழுத்துமூல கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.