வடகொரியா குறுகிய தூரம் பயணிக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பெலஸ்டிக் ஏவுகணை தாக்குதலொன்றை நடத்தியுள்ளது. அந்நாட்டின் கிழக்கு கடற்பகுதியை சென்றடையும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டனி பிளின்கன் மாநாடொன்றில் பங்கேற்பதற்காக தென் கொரியாவிற்கு செல்வதற்கு தயாராகி வரும் நிலையில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்கா செய்தி வெளியிட்டுள்ளதுடன் ஜப்பான் கடற்பகுதியை சென்றடையும் வகையிலேயே ஏவுகணை குறி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் வடகொரியா இதுவரை எவ்வித பதிலையும் வெளியிடவில்லை. இதேவேளை தமது கடற்பரப்பில் ஏவுகணை விழுந்துள்ளதை ஜப்பான் உறுதிசெய்துள்ளது.