ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமர் புட்டின் 87 வீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய ஐந்தாவது முறையாகவும் அவர் ஆட்சிபீடம் ஏறுவதில் எவ்வித சந்தேகமும் இல்லையென அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி புட்டின் பெற்றுள்ள வாக்குகள் வீதம் தொடர்பில் ரஷ்ய தேர்தல் அதிகாரிகள் அதிகாபூர்வமாக தகவல்களை வெளியிட்டுள்ளனர். குறித்த பெறுபேறுகள் ஊடாக ஏனைய மேற்குலக நாடுகளை விடவும் ரஷ்யாவில் ஜனாநாயகம் வெளிப்படையாக உள்ளமை புலப்படுவதாக ஜனாதிபதி புட்டின் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மக்களின் நம்பிக்கையை வென்ற எந்தவொரு எதிர்க்கட்சி வேட்பாளரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்கப்படவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மறைந்த அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் எலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். மேற்குலக நாடுகள் பல குறித்த தேர்தல் நியாயமான முறையில் இடம்பெறவில்லையென குற்றம் சுமத்தியுள்ளன.
ரஷ்யாவின் சர்வாதிகாரி தனக்கென மற்றுமொரு தேர்தலை உருவாக்கியுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொல்டிமிர் ஷெலன்ஸ்கி விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.