கெனடா தலைநகர் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளன. கடந்த 8ம் திகதி இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட ஆறு பேரின் இறுதிக் கிரியைகள் ஒட்டாவா க்ரப்போர்ட் டிரைவ் பகுதியில் இடம்பெறவுள்ளன.
குறித்த சம்பவத்தில் காயங்களுக்குள்ளான இலங்கையரான தனுஷ்க விக்கிரமசிங்கவும் இதில் பங்கேற்கவுள்ளார். அவர் உடல் ரீதியாக குணமடைந்து வருகின்ற போதிலும் உள ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கெனடாவிலுள்ள பெத்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அவரின் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு குறித்த சம்மேளனம் கெனடா பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை இறுதிக் கிரியைகளில் கெனடாவிலுள்ள இலங்கையர்கள் பலர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.