இலங்கை கிரிக்கட் அணியின் புதிய வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆக்கிப் ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஐ.சி.சி டுவன்டி டுவன்டி உலக கிண்ணத் தொடர் நிறைவடையும் வரை அவர் இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்கேற்றும் பங்களாதேஷ் அணியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லிடன் தாஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக ஜகீர் அலி போட்டியில் பங்கேற்பார் என பங்களாதேஷ் கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அணியுடன் இடம்பெற்ற இரு ஒருநாள் போட்டிகளிலும் லிடன் தாஸ் ஓட்டங்களை பெறாது ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.