வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் முதற்தடவையாக அதிசொகுசு வாகனமொன்றில் பயணித்துள்ளார். குறித்த வாகனம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டினினால் அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒன்றாகும்.
கடந்த ஆண்டு மாநாடொன்றில் பங்கேற்றத்தையடுத்து இரு நாட்டு தலைவர்களுக்குமிடையிலான நெருக்கம் அதிகரித்தது. தன்னிடமுள்ள அதிசொகுசு வாகனங்களில் பயணிக்கும் அனுபவத்தை பெறுமாறு ரஷ்ய ஜனாதிபதி புட்டின், வடகொரிய தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த அதிசொகுசு வாகனம் கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யாவிலிருந்து வடகொரியாவிற்கு அனுப்பப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வாகனத்தை பரிசோதித்து பார்க்கும் வகையில் கிம் ஜொங் உன் அதில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.