சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குசல் மென்டிஸ் அணிக்கு தலைமைதாங்கவுள்ளார். உப அணித் தலைவராக ச்சரித் அசலங்க செயறப்படவுள்ளார்.
இதற்கமைய ஒருநாள் தொடரில் குசல் மென்டிஸ், ச்சரித் அசலங்க, பெத்தும் நிஸ்ஸங்க, அவிஸ்க பெர்னான்டோ, சதீர சமரவிக்கிரம, ஜனித் லியனகே, கமிந்து மென்டிஸ், சஹான் ஆராய்ச்சிலாகே, வனிந்து ஹசரங்க, மஹீஸ் தீக்ஸன, துனித் வெல்லாலகே, அகில தனஞ்ஜய, சாமிக்க கருணாரத்ன, டில்சான் மதுசங்க, பிரமோத் மதுஸான், லஹிரு குமார ஆகியோர் விளையாடவுள்ளனர்.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நாளை இடம்பெறவுள்ளது. இரண்டாவது போட்டி எதிர்வரும் 15ம் திகதியும், 3வது போட்டி 18ம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.