அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பாதசாரிகள் மீதே கெப் ரக வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் 16, 19 மற்றும் 21 வயதுடைய மூன்று இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். மூவரும் பிஹிம்பியகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய மேலும் 2 சிறுமிகள் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை ரம்பேவயில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த கெப் வண்டி ஒன்று வீதியில் பயணித்த இந்த 5 பேர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் பின்னர் கெப் ரக வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.