பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 476.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகமாகும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சுப் பொறுப்பை ஏற்ற கடந்த காலப்பகுதியில் மாத்திரம் 9691.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருவாயாக கிடைக்கப்பெற்றுள்ளது.
சட்ட ரீதியாக நாட்டுக்கு பணம் அனுப்புமாறு புலம்பெயர் தொழிலாளர்களிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சு தெரிவித்துள்ளது.