தம்புள்ளை இப்பன்கட்டுவா நீர்த்தேக்க மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று மதியம் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.காலி ஹல்வித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்து நெத்மின என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
தனது சிறிய தாய் மற்றும் பாட்டியுடன் அனுராதபுரத்திற்கு புனித யாத்திரை சென்ற வேளையில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. அனல்மின் நிலையத்திற்கு நீர் வழங்கும் பிரதான மாற்றுப்பாதை இந்த இடத்தில் அமைந்துள்ளதுடன், பாட்டி முதியவர்களுடன் ஏரியில் குளிப்பதற்கு இறங்கிய போது குறித்த பாடசாலை மாணவன் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாக பாட்டி குறிப்பிட்டுள்ளார்.
சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தம்புள்ளை பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவின் குழுவினரின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன்போது மாணவரின் சடலம் மீட்கப்பட்டது. தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.