எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
டொலர் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அத்தியாவசிய பொருட்கள் பலவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இன்று முதல் லங்கா சதொச நிறுவனத்துக்கு தினமும் 1,000,000 முட்டைகள் விநியோகிக்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.