fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எதிர்வரும் சில மாதங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2024 10:47

எதிர்வரும் சில மாதங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம்

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் ஓட்டம் குறைவடைந்ததன் விளைவாக மேல், மற்றும் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மக்கள் வழமையை விட வெப்பத்தை உணர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம், தெற்கு மற்றும் சப்ரகமுவ பகுதிகளில் காற்றின் ஓட்டம் குறைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.

“இலங்கையில் சில பகுதிகளில் காற்றின் ஓட்டம் குறைந்து வருகிறது. எனினும், வடக்கு மற்றும் கிழக்கில் ஓரளவு பலத்த காற்று வீசி வருவதால், நிலைமை வேறுபட்டது” என்றார்.

“இது ஒரு அசாதாரண நிகழ்வு அல்ல, இது ஆண்டின் இந்த நேரத்தில் நடக்கிறது. எதிர்வரும் சில மாதங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்தில் சூரியன் நேரடியாக இலங்கைக்கு வரும்” என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் நிலவரப்படி கொழும்பில் 35°C, கட்டுநாயக்கவில் 33°C, மாத்தறை 32°C, குருநாகல் 31°C மற்றும் இரத்தினபுரியில் 31°C ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது. மாறாக, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரிக்கும் குறைவாக இருந்தது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2024 10:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க