fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யுக்திய  நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் மேலும் 705 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2024 11:35

யுக்திய  நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் மேலும் 705 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய  நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 553 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் 152 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 553 சந்தேக நபர்களில் போதைப்பொருளுக்கு அடிமையான 3 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 5 சந்தேக நபர்கள் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 152 சந்தேக நபர்களில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 27 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 122 சந்தேக நபர்களும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2024 11:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க