வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹார மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கையடக்க தொலைபேசிகள் மற்றும் கைக்கடிகாரங்களை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 12 இல் வசிக்கும் 31 வயதுடைய அப்துல் ஹமீட், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுக சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.