fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வேக கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் நுழைந்த கார்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2024 10:42

வேக கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் நுழைந்த  கார்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி கடையொன்றுக்குள் புகுந்த சம்பவம் நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்டபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது கடையின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், துவிச்சக்கரவண்டி மற்றும் முச்சக்கரவண்டியொன்றையும் குறித்த கார் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 7, 2024 10:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க