fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யுக்திய நடவடிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 730 சந்தேக நபர்கள் கைது..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2024 10:15

யுக்திய நடவடிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 730 சந்தேக நபர்கள் கைது..

யுக்திய நடவடிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 589 பேர் போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 730 சந்தேக நபர்களில் 144 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையான நால்வர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் 5 பேர் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2024 10:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க