fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி : நால்வர் காயம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 29, 2024 12:46

கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி : நால்வர் காயம்

கதிர்காமம் – செல்லக்கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானதோடு நால்வர் காயமடைந்துள்ளனர்.

கதிர்காமம் பிரதான வீதியின் பசறையாய சந்திக்கு அருகில் வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றை விபத்துக்குள்ளாக்கி வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி பின்னர் கனரக வாகனமொன்றில் மோதியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு நால்வர் காயமடைந்த நிலையில் தெபரவௌ மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். வேனின் அதிவேகமே விபத்துக்கு காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 29, 2024 12:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க