தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 118 ஆவது கிலோமீற்றருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து காரணமாக மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதனால், கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கொடகமையில் வௌியேறி கொக்மாதுவ ஊடாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் மீண்டும் நுழையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.