fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2024 13:21

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின் வீடு திரும்பிய இளைஞனை வீதியில் வழி மறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்  குறித்த இளைஞனின் பணம், மற்றும் கைபேசி என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் குறித்த இளைஞன் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பும் வேளை, அல்வாய் பகுதியில் வழிமறித்த கும்பல், வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2024 13:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க