fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் விசாரணை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2024 12:32

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் விசாரணை

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆரம்பமானது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபில் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணனாதாக காணப்படுவதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட பல தரப்பினர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

உத்தேச சட்டமூல வரைபின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனதி உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதால் அதனை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜென வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டுமென தீர்ப்பளிக்குமாறு கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2024 12:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க