fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள இளம் வேட்பாளர் குறித்து கருத்து..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2024 12:50

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள இளம் வேட்பாளர் குறித்து கருத்து..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் சார்பில் இளம் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார். அவ்வாறு களமிறக்க முடியாவிட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வளவு காலமும் பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களித்து இறுதியாக எமக்கு எதுவும் கிடைக்கவில்லை. எங்களது பிரச்சினை அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. பிரச்சினைகளுக்கான தீர்வையும் பெற்றுத்தரவில்லை.

இந்நிலையில் இம்முறை தேர்தலில் இளம் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டால் எதிர்பார்ப்புக்களை பெற முடியும். யாரும் இல்லாவிட்டால் எனக்கும் போட்டியிட முடியும். என தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2024 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க