fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் மரணம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2024 16:50

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் மரணம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

விவசாய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான 60 வயதுடைய லக்நாத் பீரிஸ் என்பவரே உயிரிழந்தார்.

அதிகமான மாத்திரைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து உடலில் பரவியதால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர் தனது மனைவியுடன் பழைய கலஹா வீதி சரசவி உயன பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2024 16:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க